என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஜெயாவும் விஜயாவும் தமிழக மக்களும்.... !!


அய்யா அம்மா அம்மம்மா... என்ன கூத்து நடந்துகொண்டிருக்கிறது  தமிழகத்தில்



கேமரா எல்லாம் வைத்துக்கொண்டு ரிப்போர்ட்டர்ஸ் இருப்பதைப் பார்த்து சினிமா ஷூட்டிங் தான் நடக்கிறதென்று இரண்டு கூத்தாடிகளும் நினைத்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு... வார்த்தைகளும் பேச்சும் செய்கைகளும் கண்றாவிக்காட்சியாக அரங்கேறுவதற்கா சட்டசபைக்கு இவர்களை அனுப்பினோமென்று தலையில் அடித்துக் கொண்டு மக்கள் அலறும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிகழ்ச்சியை எல்லா தொலைக்காட்சிகளிலும் மக்கள் பார்த்து மிரண்டு கொண்டிருந்ததனர் நேற்று.

என்ன பேசுவது என்று தெரியாமல் என்னால்தான் உனக்கு இந்தப் பதவி. நானில்லை என்றால் உனக்கிந்த நாற்காலி கிடைத்திருக்காது என குழாயடிச் சண்டையாக மாறிவிட்டது சட்டமன்றம். 

தமிழ்நாட்டு நிலைமை என்ன, மக்களுக்கு என்ன செய்யணும் நம்முடைய எதிர்கால திட்டம் என்ன என்பதைப் பற்றி பேசுவதற்கும் முடிவெடுப்பதற்குமான இடத்தில் உன்னை என்னோடு சேர்த்துக்கிட்டதால நான் வெட்கப்படறேன் என முதலமைச்சர் சொல்வதும், உங்ககூட சேர்ந்ததால நாங்கதான் வெட்கப்படறோம் என்று எதிர்கட்சித் தலைவர் சொல்வதும் ... இதையெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவே பார்த்து கைகொட்டிச் சிரிக்க இவங்க ளுக்கு நாம ஏன் ஒட்டு போட்டோமென்று  இந்த கூட்டு சேர்ந்து ஒட்டு வாங்கிய கூத்தாடிகளுக்கு ஓட்டுபோட்ட தமிழக மக்கள்  வெட்கப்படுவதை எந்த சேனலிலும்  சொல்லவே இல்லை.  

நாக்கை மடித்து கண்ணை உருட்டி, கையை மடக்கி விஜயகாந்த் கோபப்பட் தது கீழ்த்தரமான செயலென்றாலும் ...அம்மாவிற்குமுன் 90  டிகிரியில் நிற்கவே பயப்படும் அமைச்சர்களுக்கு / உறுப்பினர்களுக்கு / மக்களுக்கு மத்தியில் தைரியமாகப் பேசிய விஜயகாந்த்திற்கு ஒரு சபாஷ்  போட்டே ஆகவேண்டும். 


தமிழ் நாடு உருப்பட்டுடும் ... ரொம்ப சீக்கிரம்...!! 

2 கருத்துகள்:

  1. தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று பார்த்தால் பதவி ஆசையில் சண்டையல்லவா பிடிக்கிறார்கள் அக்காவின் கட்டுரை சிறந்த ஒரு படிப்பினை வாழ்த்துக்கள் அக்கா..

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனாஸ்!

    பதிலளிநீக்கு