என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

இந்த வருட காதலர்தினம்... குதூகலத்துடன் இருக்கும்.


தமிழ் நாட்டு சட்டசபையில் முதல்வரும் எதிர்க்கட்ட்சித் தலைவரும் போட்ட சண்டையை எல்லா தொலைக்காட்சியும் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டிருக்க அதனால் ஏற்பட்ட காதுவலியிலிருந்து நாம் மீண்டு வருவதற்குள்.... கர்நாடக சட்டசபையில் அமைதியாக உட்கார்ந்து தொலைபேசியில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள அமைச்சர்கள். 

சட்டசபையில் கூட்டணி வைத்து ஆபாச வீடியோவை எட்டி எட்டி பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அந்த மூன்று அமைச்சர்கள் யார் என்றால் .... காதலர் தினத்தைக் கொண்டாட தடை செய்து கொண்டிருந்த அதே பாஜக கட்சியினரைச் சேர்ந்தவர்கள் தாம்.  

சட்டசபையிலேயே ஆபாசப்படம் பார்க்கிறார்கள் என்றால் இவர்களின் ஒழுக்கம் எந்த அளவிற்கு இருக்குமென்று நாம் கணக்க்கிட்டுக்கொள்ளலாம். வக்கிர புத்தி கொண்ட இவர்கள் தாம் தேசபக்தி மிகுந்தவர்களாகவும் இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்ற அவதரித்தவர்கள் போலவும் நடந்து கொண்டவர்கள். 

பாவம் காதலர் தினத்தன்று வயதுப்பிள்ளைகளை ஒன்றாகக் கண்டுவிட்டால் கடந்த சில வருடங்களாக இவர்கள் செய்த அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சினிமா தியேட்டர்களில் சென்று காதலர்களை மிரட்டுவதும் தியேட்டர், ஹோட்டல் பப் என எல்லா இடங்களையும் அடித்து நொறுக்கியும், காதலர்களை கட்டாயப்படுத்தி தாலி கட்டவைத்தும்காதலர்களை இவர்கள் படுத்திய பாடு தான் என்னே?

எத்தனை காதலர்களின் வயிற்றெரிச்சலோ .. இனி இவர்கள் காதலர் தினம் பற்றி வாயே திறக்க முடியாத படி சம்பவம் நடந்துவிட்டது.

அடுத்தவாரம் வர இருக்கும் காதலர் தினத்தன்று... பாஜக ஆட்கள் பழையபடி காதலர்களை மிரட்டலாம் என நினைத்தால்... "அடி செருப்பால.... சட்டசபைல உக்ட்கார்ந்து புளூ பிலிம் பார்க்கற உங்களுக்கு எங்களை தடுக்க என்ன அருகதைடா  இருக்கு?  நீங்க புளூ பிலிம் பார்க்கலாம் நாங்க காதலிக்கக் கூடாதான்னு " முகத்தில் காரிவுமிழ்ந்துவிட்டு போய்விடுவார்கள்....

அய்யோ பாவம் பாஜக!  காதலர் தினத்தைக் கைகட்டி வேடிக்கை பார்க்கப்போகிறது இனி! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக